சென்னை: பல விதத்திலும் பயன்படும் தேங்காய் எண்ணெய் பாட்டில் இல்லாத வீடுகளே நம் நாட்டில் இருக்காது. தேங்காய் எண்ணெய்யின் மூலப்பொருள் இந்த உடல், தோல் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை தர கூடியது.
தேங்காய் எண்ணெய் சமையலுக்கும் சிறந்ததாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுவதில் தொடங்கி தலைமுடியை வலிவாக்குவது வரை தேங்காய் எண்ணெய் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் சில சிறந்த நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது தேங்காய் எண்ணெய். முடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் அவை நீளமாக, வலுவாக மற்றும் மிருதுவாக ஆகிறது. மேலும் தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. முடி உதிர்தல், பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வறண்ட மற்றும் உலர்ந்த முடி ஒரு பொதுவான காரணம். தேங்காய் எண்ணெய் இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. கோல்ட்-ப்ரஸ்டு தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம். மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது, தேங்காய் எண்ணெய் ஜீரணிக்க எளிதானது மற்றும் நம் செரிமான அமைப்புக்கு ஆரோக்கியமானது. குறிப்பாக பெண்களின் உடல் பருமனை குறைக்க தேங்காய் எண்ணெய் சிறந்தது. தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் ஃபிட்டாக, ஆரோக்கியமாக இருக்கலாம்.