சென்னை: தமிழகத்தில் பைக் டாக்சிகள் பறிமுதல் செய்யப்படாது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாக்சியாக பயன்படுத்தப்படும் பைக்குகள் பறிமுதல் செய்யப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பைக் டாக்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழக அரசால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.
அதேசமயம் விதிகளை பின்பற்றாமல் ஓட்டப்படும் பைக் டாக்ஸிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.