சென்னை : ஏழு மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
எனவே வெளியில் செல்லும் மக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.