தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி கலைத்துறை மாணவிகள் கல்வி சுற்றுப்பயணம் சென்று வந்தனர்.
இதில் கேரளாவின் வாஸ்கோடகாமா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கல்வி சுற்றுலா என்பது கல்லூரி மாணவிகள் படித்த இடங்களை நேரில் சென்று பார்த்து பயன் பெறுவது ஆகும். அந்த வகையில் கேரளாவில் வாஸ்கோடகாமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று மாணவிகள் பார்வையிட்டனர்.
அப்போது தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை கல்லூரி முதல்வரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இதே போல் கல்வி சுற்றுலாவில் பல இடங்களுக்கு கல்லூரி மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். கல்வி சுற்றுலாவில் மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் அன்னை மற்றும் பேராசிரியர்கள் உடன் சென்றனர்.
இது குறித்து மாணவிகள் தரப்பில் கூறுகையில், பாடங்களில் படிக்கும் இடங்களை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை நேரில் பார்வையிட்டது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இது போன்ற கல்வி சுற்றுலா கல்வித்திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் நாகரிகங்கள், பண்பாடுகள், மக்களின் பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது என்றனர்.