காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கையை கண்டித்து தொடர் வேலை நிறுத்தம். தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல், கைது என பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த 28-ம் தேதி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற செயல்களை கண்டித்தும், ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாடு திரும்ப கோரியும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து காரைக்காலில் வரும் 14, 17-ம் தேதிகளில் போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.