சென்னை : வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு… தமிழகம் முழுவதும் வரும் 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ஸ்டிரைக்கில் ஈடுபடவும், 26ஆம் தேதி நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.