தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் 4 நாட்கள் விடுமுறை முடிந்து கோவை திரும்பியதால், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை போன்ற நகரங்களில் வசிக்கின்றனர். பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள்.
பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்தாண்டு, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் பலர் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டினர். ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சமீபகாலமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் கூட்டம் குறையவில்லை. மாதக்கணக்கில் முன்பதிவு செய்து டிக்கெட் வாங்கியவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த வாரம் வெளி மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இன்று கோவை திரும்பியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி போன்ற பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் திரும்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பை குறைக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.