கும்பகோணம்: கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க கோரியும், இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகள் உயிரிழந்தது. இதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாதது காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியும், பிரசவ சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தியும், குறிப்பாக மயக்க மருந்து மருத்துவர்கள்
24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும்.
மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.