தஞ்சாவூர்: கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்… தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன் வளரும் தமிழகம் கட்சி சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மேற்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் இமான் சேகர் கண்டன உரை ஆற்றினார் மேலும், மண்டல செயலாளர் சீனி புருஷோத்தமன், மண்டல இணை செயலாளர் ராஜசேகரன், தொழில் சங்க செயலாளர் சரவணக்குமார் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தியாக மூர்த்தி, தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் கலந்து கொண்டனர். இறுதியில் தஞ்சை மாநகர செயலாளர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கடந்த ஜூன் மாதமே குறுவை சாகுபடிக்கு தர வேண்டிய 140 டிஎம்சி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.