திருச்செந்தூர்: பஸ் ஓட்டும் போது டிரைவருக்கு நெஞ்சு வலி… திருச்செந்தூரில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவருக்கு நடுவழியில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்டாண்டிலிருந்து செம்மறிகுளத்திற்கு அரசு நகர பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 7:00 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை குலசேகரன்பட்டணம் வடக்கூரை சேர்ந் ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டினார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை தாண்டி அரசு பஸ் வரும் போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இடது ஓரமாக சென்று தனியார் மண்டபம் முன்பிருந்த மின்கம்பத்தில் மோதியது. அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீதும், அந்த வழியாக நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளர் தினேஷ் என்பவர் மீதும் அரசு பஸ் மோதியது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர், வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்து 60 மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
,