திருமலை: யூடியூப் மூலம் பிரபலமாகி சர்ச்சைக்குள்ளான டிடிஎப் வாசன், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2024 ஜூலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது டிடிஎப் வாசனும், அவரது நண்பர்களும் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்றபோது கோவில் பணியாளர்கள் போல் பூட்டை திறப்பது போல் நடித்து, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இது குறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிஎப் வாசனின் வக்கீல் முத்து திருப்பதி நேற்று திருமலையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘டிடிஎப் வாசனின் வங்கி கணக்கை திருமலை போலீசார் முடக்கியுள்ளனர்.