செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் திம்மாவரம், ஆத்தூர், தென்பாதி, வடபாதி, பாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 30-ம் தேதி மற்றும் 1-ம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றால் வாழை மரங்களுடன் வாழை மரங்கள் கொத்து கொத்தாக விழுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானது.
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேதத்தை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாழை மரங்கள் மட்டுமே அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வாழைத்தோட்ட விவசாயம். பெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளில் சுமார் 100 ஏக்கரில் சுமார் ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் விழுந்து எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்தது. ஓரிரு நாளில் வாழை இலைகளை அறுவடை செய்து, வாழை இலை, வாழைப்பூ என சந்தைக்கு அனுப்ப உள்ளதாகவும், புயலில் வாழை மரங்கள் சேதமடைந்து விட்டதால், வட்டிக்கு வாங்கி தற்போது செய்வதறியாது தவிப்பதாகவும் தெரிவித்தனர்.
வட்டி அல்லது அசலை செலுத்தி, வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்தில் உள்ளனர். தற்போது ஆய்வு நடத்தி வரும் தோட்டக்கலை பயிர்த்துறை அலுவலர்கள் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.