சென்னை: சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத் துறை அறிவிப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நீர்வளத்துறை திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து சிறப்பு ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமைச்சர் பேசுகையில், ”தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, அடுத்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும். கூட்டத்தில், நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஏரிகளை பராமரிக்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க, நீர்வளத்துறை செயலாளர் க.மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.