சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு நாளை மதியம் அரை நாள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை மதியம் அரை நாள் விடுமுறையாக திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நாளை காலை மட்டும் செயல்படும் என்றும், மதியம் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்பின், சொந்த ஊருக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நலன் கருதி, நவம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.