சென்னை: சென்னையின் மையப்பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவுநீரால் சூழப்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரப்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனைக்குள், இதயப் பிரிவு, நரம்பு மண்டலத் துறை போன்ற முக்கிய பிரிவுகளின் அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, கழிவறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றினால், அது வெளியேறுவதாகவும், நோயாளிகள் அனுமதிக்கப்படும் அறைக்கு, கழிவுநீரை மிதித்து, நோயாளிகள் திரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களும் சாக்கடை நீரை மிதித்து மூக்கை மூடிக் கொள்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான கழிவறைகள் துர்நாற்றம் வீசுகிறது.
கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கழிவறையை பயன்படுத்த முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன், காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பும் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வர்களை நியமிக்க முடியாது என்றால், மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.
ஏற்கனவே, அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டு, கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு உடனடியாக முக்கியத்துவம் அளித்து, அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பி, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு குறித்து அறிக்கை மற்றும் நேர்காணல் அளித்தேன்.
இனிமேல், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். நோயாளிகளுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.