ஒரத்தநாடு: ஒரத்தநாடு புலவன்காடு கிராமத்தில் வேளாண் மாணவிகளின் ஊரக பங்கேற்பு மதிப்பீடு நிகழ்ச்சி நடந்தது.
ஒரத்தநாடு புலவன்காடு , டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் இந்த ஊரக பங்கேற்பு மதிப்பீட்டை மேற்கொண்டனர்.
இதில் கால வரிசை , பருவநிலை அட்டவணை, விவசாயிகள் வகைப்பாடு, படித்தவர்கள் விகிதம், ஆகியவை வரைபடங்களாக தயாரிக்கப்பட்டன. மேலும் கிராமத்தின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு காலவரிசை ஆகியவையும் வரையப்பட்டன. இத்தகவல்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டவை ஆகும்.
இந்த நிகழ்வில் புலவன்காடு விவசாயிகள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.