திண்டுக்கல்: தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக நிலக்கோட்டையில் பூ வரத்து குறைந்ததால் மல்லிகைப்பூ கிலோ ரூ.2000 வரை உயர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து ஒரு மல்லிகைப்பூ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், பிச்சிப்பூ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள் வரத்து குறைந்தாலும் நல்ல விலை கிடைத்து வருவதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக வருங்காலத்தில் பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை இருமடங்காக உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.