திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடித்த வெள்ள நீர் பாய்கிறது.
முழு கொள்ளளவை எட்டிய ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மிருகண்டநதியில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.