சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டப்பட்டினம் மீனவர்கள் 21 பேர் நெடுந்தீவு கடற்கரை அருகே 4 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
மேலும் நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதோடு, அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன.
எனவே மத்திய அரசு இது தொடர்பாக இலங்கை அரசிடம் கண்டிப்பாக பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.