சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் கூகுள் மேப் மூலம் தான் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கூகுள் மேப் மூலமாக, பள்ளிக்கரணையில் சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 150 சவரன் நகைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீதான திருட்டு வழக்குகள் குறித்த விசாரணையில், இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.