சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. சட்டப்படி ஆளுநரின் பதவிக்காலம் மற்றொரு கவர்னர் நியமிக்கப்படும் வரை தொடரும் அல்லது நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
ஆனால், பதவி நீட்டிப்புக்கான உத்தரவு எதுவும் வராத நிலையில், தமிழக ஆளுநராக ஆளுநர் ஆர்.என்.ரவி நீடிக்கிறார். இதையடுத்து, ஆகஸ்ட் 1, 19, ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் 3 முறை கவர்னர் டெல்லி சென்றார்.
அதேபோல் நேற்று காலை 6.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பயணம் என்றும், அன்றே சென்னை திரும்புவதாகவும் கூறினார். ஆனால், அவர் பதவி நீட்டிப்புக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்பினார்.