கம்பம்: தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் குளிர் காலநிலை நீடிக்கிறது. இதனால் திராட்சை நுகர்வு குறைந்து விலை கடுமையாக சரிந்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி நடந்து வருகிறது.
குறிப்பாக சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் திராட்சை, சென்னை, சேலம், திருச்சி, கோட்டயம், சங்கனாச்சேரி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திராட்சை அறுவடை செய்யப்படும். ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் சாதகமான தட்பவெப்ப நிலை காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யப்படுகிறது. எனவே, கம்பம் பள்ளத்தாக்கு இந்தியாவில் ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது.
மேலும் சீதோஷ்ண நிலையும் மாறி தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. இந்த குளிர்காலத்தில் திராட்சை சாப்பிடுவதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் திராட்சை நுகர்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விற்பனை தேக்கமடைந்துள்ளதால், தெருவோர வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை இவற்றை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால், திராட்சை செடிகள் பறிக்கப்படாமல் வீணாகி வருகிறது.
மழை அழுகல் நோயாலும் பாதிக்கப்படுகிறது. திராட்சை விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வகுமார் திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் செல்வக்குமார் கூறுகையில்,””உலகில் வேறு எங்கும், இதுபோன்ற சீதோஷ்ண நிலை மற்றும் ஆண்டு முழுவதும் திராட்சை விளைச்சல் இல்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு திராட்சைக்கு புவியியல் குறியீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, விற்பனை குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது விலை வீழ்ச்சியால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், திராட்சையை அனைத்து பருவங்களிலும் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.