திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை.
கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.