சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:- தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் சில இடங்களிலும், தெற்கு தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும் நேற்று மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் நேற்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது.
6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய வங்காள விரிகுடா, அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறாவளி அலைகள் வீசும்.
மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 4-ம் தேதி கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.