சென்னை: பொதுவாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும். பொதுவாக காலையில் லேசான மூடுபனி காணப்படும். 26-ம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், உள்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 27-ம் தேதி இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
28-ம் தேதி தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 1ம் தேதி தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 2-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அடுத்த 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையலாம்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு 24 முதல் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். சென்னையைப் பொறுத்தவரை; இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காலையில் லேசான மூடுபனி இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காலையில் லேசான மூடுபனி இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம்.