சென்னை : முறையான ஆவணங்களுடன் மட்டுமே
கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இட வசதியும் முறையான காற்று வசதியும் இருக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.