உடுமலை: இப்படி இருந்தா எப்படிங்க? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் மாற்றுத்திறனாளிகள். எதற்காக தெரியுங்களா?
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியில் ரூ.12. 50 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் நிதியில் பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பாதையில் நெடுஞ்சாலைத்துறை மைல்கல் அகற்றப்படாமல் பணிகள் நடக்கிறது.
இப்படி மைல்கல் அகற்றப்படாமல் இருந்தால் மாற்றுத்திறனாளிகள் நிழற்குடைக்கு செல்ல முடியாது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.