திருச்சி: திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,அண்ணா சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெற்றது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் அதிரடியாக உள்ளே புகுந்து மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்டகை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.