தஞ்சாவூர்: மாணவர்கள் தொடர் போராட்டத்ததால் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் எம்.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சாதி ரீதியாக பேசிய பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அக்கல்லூரி மாணாக்கர்கள் கடந்த 6 நாட்களாக தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறி கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.