சென்னை: பணி நியமன ஆணை… நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் ரா.செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.