சென்னை: பொதுவாக நாம் உண்ணும் உணவானது நம் உடலில் சுரக்கும் பித்தம் சேர்ந்து ஜீரணம் வருகிறது. இந்த பித்தம் சுரக்கும் உறுப்பு பித்தப்பையாகும். இதில் ஏற்படும் கற்கள் போன்றவற்றை கரைக்கும் வல்லமை கொண்டது நெல்லிக்காய் சாறு.
ஆயுர்வேதத்தின்படி, சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வை மேம்படவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும் உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால், சர்க்கரை வியாதிக்கும் நன்மருந்தாக உள்ளது.
பொதுவாக எந்த காய் கனிகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள கனி எதுவென்றால் நெல்லிக்கனி என்றால் அது மிகையாகாது. ஒருவர் ஆரோக்கியத்துக்கு ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் குறைந்த பச்சம் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்தை பெறலாம்.
நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை .உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாகவுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி சத்து இதில் இயற்கையாகவே இருப்பதால் அளவுடன் இதை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
இந்த நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும். நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள் உடலில் வயது மூப்பு அதாவது வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.