சென்னை; பல வகை சாலட் இருந்தாலும் ஹெல்த்தியான சாலட் வகைகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு வீட்டிலேயே செய்யும் இந்த ஹெல்த்தி சாலட் உதவும்.
செய்முறை: சிறிய வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய குடமிளகாய் கால் கப், துருவிய நெல்லிக்காய் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, முளைகட்டிய பச்சைப்பயறு கால் கப், நறுக்கிய புதினா, மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் மிளகுத்தூள் கால் டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் கால் டீஸ்பூன், சீரகத்தூள் கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன் மற்றும் தேன் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதைக் காய்கறிக் கலவையுடன் சேர்த்துப்பரிமாறவும். ஆரோக்கியம் நிறைந்த இந்த சாலட் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அபரிமிதமாக உள்ளது.