திருச்சி: திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்எஸ்ஏ) தமிழகத்திற்கு ஜூன் மாதம் ரூ.573 கோடியும், தமிழக பள்ளி கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு கடைசி தவணையாக ரூ.249 கோடியும் மத்திய அரசு வழங்கவில்லை.
இதுகுறித்து, செயல்தலைவர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு வலியுறுத்தினார். மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்பிக்கள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தினர்.
ஆனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்று இணைந்தால் மட்டுமே இந்த நிதியை வழங்க முடியும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. எனவே, இவ்விவகாரத்தை அரசியலாக்காமல், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதிய கல்விக் கொள்கை விவாதத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் நிதியை நிறுத்துவது சரியல்ல. நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 ஆயிரம் ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.