தஞ்சாவூர்: அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஐ.நா. மாணவர் கல்வி பயணத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சர்வதேச மாணவர் மன்றத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாநாடு நடைபெறும்.
இதில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆண் மற்றும் 3 பெண் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் 8 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.