மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வல்லுநர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள். துப்புரவு காவலர்கள். மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள்.
அரசு அறிவித்துள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, கிராமப்புற வீட்டுப் பணியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமைதியான முறையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். நாகராஜன். சேதுபாலமுருகன் காளிதாஸ். ராதாகிருஷ்ணன். உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணசாமி கூறியதாவது.
தமிழக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் உச்சநீதிமன்றத்தில் தற்காலிகமாகப் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை தமிழக அரசு மதிக்கவில்லை. .
தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்றால் 2025 ஜனவரியில் சென்னையில் அனைவரும் ஒன்று கூடி எங்கள் கோரிக்கை உத்தரவு வரும் வரை காத்திருப்போம் என்றார்.