சென்னை: கோடை வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோடை காலம் முழுவதும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க 42 சர்வதேச விமானங்களும், 164 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக்கு வெளியூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 பயணிகளின் எண்ணிக்கை இருந்தது. தற்போது, 55 ஆயிரத்தை தாண்டி, 60 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னை-இலங்கை இடையே வாரத்திற்கு 7 விமானங்களை ஏர் இந்தியா இயக்கியது, இது 10 ஆக அதிகரித்துள்ளது.