தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியின் முன்னெடுப்பில் நடைபெற்ற உயர்கல்வியில் தமிழ்நாடு பேச்சுப் போட்டியில் மாணவிகள் அசத்தல் வெற்றி பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகை , கேடயம், வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியின் முன்னெடுப்பில் தஞ்சாவூர் கலைஞர் நூலக வாசகர் வட்டம் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லூரிகளில் ” உயர்கல்வியில் தமிழ்நாடு “. என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு கல்லூரியிலும் கல்லூரி அளவில் பேச்சுப்போட்டி நடத்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரடியாக சென்று பரிசுத்தொகை, பாராட்டுக் கேடயம், பாராட்டுப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியும் மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்ச்சியின் துவக்கமாக இன்று பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகை, பாராட்டுக் கேடயம் பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் மேலும் இப்பேச்சு போட்டியில் பங்கு பெற்ற 200 மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழையும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட் சகோதரி விக்டோரியா மற்றும் தமிழ் துறை பேராசிரியர்களும் ஏராளமான மாணவிகளும் பங்கேற்றனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கூறுகையில்,
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சியில் உயர்கல்வியில் தமிழ்நாடு பேச்சுப்போட்டியில் கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டு அமைச்சர்கள் முன்னிலையில் சிறப்பு செய்யப்படுவார்கள். இம் மாணவர்களின் பேச்சுத்திறனை கானும் போது உயர்கல்வியில் தமிழ்நாடு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.