தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடி மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் மாவட்டம் சீனிவாசநல்லூரில் சரண்ராஜ் என்ற ரவுடியை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரண்ராஜ் மீது கொலை உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கொன்றில், நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய போது அவரை, 3 டூவீலர்களில் வந்து வெட்டி விட்டு தப்பிய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.