சென்னை: வழிபாட்டு முறைகளில் யாரும் தலையிடக்கூடாது என்று அறநிலையத்துறை தங்களின் வாதத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அறநிலையத்துறை தரப்பு தங்களது வாதத்தை முன்வைத்தது.
அதில், ‘1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்கு பின் என்ன வழிபாட்டு முறைகள் இருந்ததோ அதே முறை தான் நீடிக்க வேண்டும் என சட்டம் உள்ளது. வழிபாட்டு முறைகளில் யாரும் தலையிடக்கூடாது என வழிபாட்டுச் சட்டம் கூறியுள்ளது.
1991 வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு சட்டப்படி, 1947ல் வழிபாட்டு தலம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் பராமரிக்க வேண்டும்’ என கூறியுள்ளது.