சென்னை : பெருநகரங்களில் நிலுவையில் இருக்கும் உட்கட்டமைப்பு திட்டங்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.8,947 கோடி பதிப்பிலான குடிநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்கள் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய இந்த திட்டங்கள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருப்பதாக நகர்ப்புற உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது. நிலுவைத் திட்டங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.