வால்பாறை: கோவை அருகே வால்பாறை பகுதியில் நூற்றாண்டு பழமையான மரம் முறிந்து விழுந்து எஸ்டேட் கட்டிடம் சேதம் அடைந்தது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் தனியார் எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் மீது நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.