ஊட்டி: தரம் குறைந்த கேரட்டை பறிமுதல் செய்து மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளனர் ஊட்டி விவசாயிகள்.
கர்நாடக மாநிலம், மாளூர் பகுதியில் சில வியாபாரிகள், தரம், சுவை குறைந்த கேரட் மூட்டைகளை, ஊட்டி கேரட் மூட்டைகளில் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஊட்டி விவசாயிகள் சங்கத்தினர், குன்னுார் அருகே கேத்தி பாலாடா பகுதிக்கு நேற்று சென்று, கேரட் கழுவும் மையங்களில் ஆய்வு நடத்தியது. அப்போது, 5 டன் மாளூர் கேரட், இயந்திரங்களில் கழுவ வைத்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, தரமில்லாத கேரட் லாரி கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.