சென்னை: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து என்எல்சி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும். என்.எல்.சி. நிர்வாகத்தினரிடையே நிலவி வரும் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு உயர்நிலைக் குழுவை 6 மாதத்தில் அமைக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்,” என்றார்.