ஈரோடு: காதல் திருமணம் செய்த மகளை காரில் பெற்றோரே கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேறு சமூக இளைஞரை காதல் திருமணம் செய்துக் கொண்டு ஈரோட்டில் வசித்து வந்த மகளை கணவர் கண்முன்பு காரில் கடத்திச் சென்றதாக பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்த விஜய், அர்ச்சனா என்பவரை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார்.
வேலைக்காக மனைவியை டூவீலரில் அழைத்துச் சென்ற போது காரில் வந்த அர்ச்சனாவின் பெற்றோர் அர்ச்சனாவை கடத்திச் சென்றதாக விஜய் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நாமக்கல் சென்று அர்ச்சனாவின் பெற்றோரை கைது செய்ததோடு அவரையும் மீட்டனர்.