சென்னை: உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சிறிது சிறிதாகச் சாப்பிடக் கொடுக்கவும்
ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்போது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.
வகை வகையாக உணவுகளை கொடுங்கள்
எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் குழந்தைகளை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின் பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.
உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.