நாகப்பட்டினம்: பயணிகள் வருகை குறைவாக உள்ளதால், நாகை-இலங்கை பயணிகள் படகு இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகைக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘செரியபாணி’ என்ற பெயரிடப்பட்ட படகு சேவை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஓராண்டுக்கு பின், கடந்த, 16ம் தேதி, ‘சிவகங்கை’ என்ற மற்றொரு கப்பல் நிறுவனம், நாகை – இலங்கை இடையே, மீண்டும் கப்பல் சேவையை துவக்கியது. நாகையில் இருந்து முதல் நாளில் 44 பேர் இலங்கை சென்ற நிலையில், அடுத்தடுத்த பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
நேற்று நாகையில் இருந்து இலங்கைக்கு 5 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு 14 பேரும் மட்டுமே பயணம் செய்தனர். இதன் காரணமாக நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து நடைபெறும் என கப்பலை இயக்கும் இன்ஸ்ரீ நிறுவனம் அறிவித்துள்ளது.
செவ்வாய், வியாழன், ஞாயிறு… என அந்நிறுவனம் கூறும்போது, ‘‘போதிய பயணிகள் வராததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் நாகை-இலங்கை இடையே 3 நாட்கள் மட்டுமே படகு போக்குவரத்து இருக்கும்.
இந்த நடைமுறை அடுத்த மாதம் 15ம் தேதி வரை தொடரும். அதன் பிறகு பயணிகளின் வருகையைப் பொறுத்து கப்பல் சேவை முடிவு செய்யப்படும்.