சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கான கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் அனைத்து பயணிகளுக்கும் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன.
அதன்படி, இன்று முதல் 15-ம் தேதி வரை இணையதளம், மொபைல் செயலி மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

உள்நாட்டு விமானக் கட்டணம் ரூ.1,279 முதல் சர்வதேசக் கட்டணம் ரூ.4,279 வரை தொடங்குகிறது. இதேபோல், சாமான்களை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டணச் சலுகை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் 19 முதல் மார்ச் 31, 2026 வரை தாங்கள் விரும்பும் தேதிகளில் பயணிக்கலாம். இது சுமார் 5 மில்லியன் பயணிகளுக்கு பயனளிக்கும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.