சென்னை: கோயில் ஊழியர்களுக்கான துறை ரீதியான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் விவரங்கள்:-
கோயிலில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் துறை ரீதியான ஓய்வூதியம் ரூ. 4,000 லிருந்து ரூ. 5,000 ஆகவும், துறை ரீதியான குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,000 லிருந்து ரூ. 2,500 ஆகவும் உயர்த்தப்படும் என்று 2025-26 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற கோயில் ஊழியர்களுக்கான துறை ரீதியான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 4,000-லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேபோல், ஓய்வு பெற்ற கோயில் ஊழியர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் நேரடி வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,000-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.