சென்னை: சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக என்று தெரியுங்களா?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி இல்லாமல் நடப்படும் கொடிக்கம்பங்கள், மாநகராட்சி அதிகாரிகளால் எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.