கோவை: கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ளது தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி. இந்த மலையில் மலையேற்றம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதில், “மலையேறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். காட்டு விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ, தீயை எரிக்கும் பொருட்களையோ காட்டில் எங்கும் எடுத்துச் செல்லாதீர்கள். அனுமதியின்றி வனப்பகுதியில் மரக்கன்றுகளை நடவோ, மரங்களை சேதப்படுத்தவோ, கொடிகளை ஏற்றவோ கூடாது.
ஆறாவது மலையில் உள்ள ஆண்டி சுனையில் நீராடுவதையும், ஈரமான ஆடைகளை வைத்து விட்டு குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.